வெளிநாட்டு உணவு வகைகளை ருசி பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில், மலேசியன் ஃபேமஸ் ஸ்ட்ரீட் ஃபுட் 'ஒதக் ஒதக்'-ஐ எவ்வாறு எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம் என்று நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார். அதனை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீன்,
இறால்,
லெமன் கிராஸ்,
சிவப்பு மிளகாய்,
சின்ன வெங்காயம்,
பூண்டு,
இஞ்சி,
கரம் மசாலா,
மஞ்சள் தூள்,
உப்பு,
சர்க்கரை,
கார்ன் ஃபிளவர் மாவு,
அரிசி மாவு,
முட்டை,
தேங்காய் பால்,
எண்ணெய்.
செய்முறை:
மீன் மற்றும் இறாலை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர், லெமன் கிராஸை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இதனிடையே, சிவப்பு மிளகாயின் விதைகளை நீக்கி விட்டு, சுடுதண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
இந்த மிளகாய் நன்றாக ஊறிய பின்னர், அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, லெமன் கிராஸ் ஆகியவை சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதன் பின்னர், இதே மசாலாவுடன் சேர்த்து வெட்டி வைத்த மீன், இறால், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை, கார்ன் ஃபிளவர் மாவு, அரிசி மாவு, ஒரு முட்டை ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும்.
இந்தக் கலவையுடன் தேங்காய் பாலை சேர்த்து மீண்டும் அரைக்கலாம். இப்போது, வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி அதில் அரைத்து வைத்திருக்கும் கலவையை மடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை குக்கரில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான மலேசியன் ஃபேமஸ் ஸ்ட்ரீட் ஃபுட் 'ஒதக் ஒதக்' தயாராகி விடும்.