எப்போதும் சிக்கனில் ஒரே மாதிரியான உணவு செய்து சளித்து விட்டதா ஒருமுறை சிக்கன் சுக்கா இப்படி செய்து பாருங்கள். சுவையாக இருக்கும். எல்லோருக்கும் பிடித்த மணப்பட்டி சிக்கன் சுக்கா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
சிக்கன்
மஞ்சள் தூள்
காய்ந்த மிளகாய்
உப்பு
மிளகாய் தூள்
சீரகத்தூள்
முந்திரி
கருவேப்பிலை
இஞ்சி
பூண்டு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் சுத்தம் செய்த சிக்கனை வேக விடவும். அதில் வரும் மீதமுள்ள தண்ணீரை வடித்து விட்டு அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி, உப்பு போட்டு வேக விடவும். மேலே சிறிது சீரகத்தூள் தூவி, கருவேப்பிலை, சேர்த்து வெள்ளைப்பூண்டு சேர்த்து கிளறி வேக விடவும்.
மணப்பட்டி சிக்கன் சுக்கா | Authentic Manapatti Chicken Sukka Recipe | Village-Style Sukk
எண்ணெய் பிரிந்துவரும் பதத்தில் இறக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil