2 கப் அரிசி மாவுக்கு இவ்வளவு கடலை மாவு... மணப்பாறை ஸ்டைல் முறுக்கு; இப்படி சுட்டு குடுங்க!

யுடியூப் பார்த்து வகை வகையான திண்பண்டங்களை இல்லதரசிகள் தயார் செய்யும் இன்றைய ஸ்மார்ட்ஃபோன் யுகத்திலும் மவுசு குறையாத திருச்சி, மணப்பாறை முறுக்கு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

யுடியூப் பார்த்து வகை வகையான திண்பண்டங்களை இல்லதரசிகள் தயார் செய்யும் இன்றைய ஸ்மார்ட்ஃபோன் யுகத்திலும் மவுசு குறையாத திருச்சி, மணப்பாறை முறுக்கு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

author-image
WebDesk
New Update
download (56)

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில் பயணங்களில் பெரும்பாலான ரயில்கள் மணப்பாறையில் நின்று தண்ணீர் பிடித்து நகரும். அப்படியொரு ரயில் பயணத்தில், திருநெல்வேலியில் இருந்து வந்த கிருஷ்ண ஐயர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி, மணப்பாறை ரயில் நிலையத்தில் முறுக்கு சுட்டு விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். இப்படி மணப்பாறை முறுக்கு பிரபலமாக காரணகர்த்தாவாக திகழ்கிறார் மணி ஐயர். இன்றும் மணி ஐயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது இந்தத் தொழிலை செய்து வருகின்றனர். அத்துடன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தத் தொழிலை செய்துவரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மணப்பாறையில் இன்றைக்கும் உள்ளன.

Advertisment

முறுக்கு என்றதும் உடனே நம் எண்ணத்தில் எழுவது திருச்சி மணப்பாறை. யுடியூப் பார்த்து வகை வகையான திண்பண்டங்களை இல்லதரசிகள் தயார் செய்யும் இன்றைய ஸ்மார்ட்ஃபோன் யுகத்திலும் மவுசு குறையாத திருச்சி, மணப்பாறை முறுக்கு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

பச்சரிசி மாவு – 2 கப் (300 கிராம்)
கடலை மாவு – 50 கிராம்
சீரகம் – ½ டீஸ்பூன்
எள்ளு – ½ டீஸ்பூன்
உப்பு – ¼ டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 200 மில்லி

செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, சீரகம், எள்ளு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதில் வெண்ணெய் சேர்த்து, கை கொண்டு நன்கு கலக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மாவு சீராக நன்கு கலந்து, நன்கு பிசைய வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். மாவை எண்ணெயில் தட்டிப்போட்டு மிதமாக தங்கம் நிறமாகச் சுட வேண்டும்.

Advertisment
Advertisements

அது நன்கு பொன்னிறமானவுடன், எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சில நேரம் குளிரவிட்ட பின், சாப்பிட்டு மகிழுங்கள்!

இது ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டியாகும். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: