வீக் எண்ட் ரெசிபி: மணக்க மணக்க மணப்பட்டி சிக்கன்... இப்படி செய்து குடுங்க; இன்னும் இருக்கான்னு கேட்பாங்க!

சுவையான மணப்பட்டி சிக்கன் சுக்கா எவ்வாறு சுலபமாக செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சுவையான மணப்பட்டி சிக்கன் சுக்கா எவ்வாறு சுலபமாக செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

author-image
WebDesk
New Update
Chicken chukka recipe

அசைவ உணவு பிரியர்கள் நிறைய பேருக்கு சிக்கன் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அந்த வகையில், காரசாரமான மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்முறை குறித்து இப்பதிவில் காணலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ,
பூண்டு - 50 கிராம்,
சீரகத்தூள் - 50 கிராம்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 150 மில்லி,
முந்திரிப் பருப்பு - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
இஞ்சி விழுது - 10-15 கிராம் மற்றும்
வர மிளகாய் - 2

செய்முறை:

Advertisment
Advertisements

அடுப்பில் கடாய் வைத்து, அதில் நறுக்கி வைத்திருக்கும் 1 கிலோ சிக்கனை சேர்த்து நன்கு கிளறி வேண்டும். இப்போது, சிக்கனில் இருந்து வெளியாகும் தண்ணீரை வடிகட்டி எடுக்க வேண்டும். சிக்கன் சிறிது நிறம் மாறியதும், 150 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து கிளற வேண்டும்.

பிறகு, 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள், 2 வரமிளகாய், 50 கிராம் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும். இதையடுத்து, 15 கிராம் இஞ்சி விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அனைத்து மசாலா பொருட்களும் சிக்கனுடன் கலந்ததும், 50 கிராம் சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி வேண்டும்.

இறுதியாக, 1 கொத்து கறிவேப்பிலை, இடித்து வைத்த பூண்டு மற்றும் 100 கிராம் முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். சிக்கன் பொன்னிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து விடலாம். இவ்வாறு செய்தால் சுவையான மணப்பட்டி சிக்கன் சுக்கா தயாராகி விடும்.

Chicken

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: