இந்த மணத்தக்காளி கீரைக்கு வாய்ப்புண் முதல் அல்சர் வரை உடலில் உள்ள எந்த வகையான இஃப்லேமேஷனையும் குறைக்கக்கூடிய சக்தி இருக்கிறது. இந்த மணத்தக்காளி கீரை எல்லா இடத்திலும் விளையக்கூடிய ஒரு அமிர்தம் என்று வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
கோடைக்காலம் தொடங்கிவிட்டது தமிழ்நாட்டி 40 டிகிரி வெயில் கொளுத்துகிறது. அதனால், இந்த வெயிலின் வெப்பத்தில் இருந்து உடலைப் பாதுகாத்துக்கொள்ள உடலைக் குளுமையாக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டு என்று பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் அறிவுறுத்துகிறார்.
Advertisment
மணத்தக்காளி கீரை கடவுள் கொடுத்த வரம் என்று கூறும் செஃப் வெங்கடேஷ் பட் தனது இதயம் தொட்ட சமையல் மணத்தக்காளி கீரையை வைத்து ரசம் செய்வது எப்படி என்று செய்துகாட்டியுள்ளார். மேலும், இந்த மணத்தக்காளி கீரைக்கு வாய்ப்புண் முதல் அல்சர் வரை உடலில் உள்ள எந்த வகையான இஃப்லேமேஷனையும் குறைக்கக்கூடிய சக்தி இருக்கிறது. இந்த மணத்தக்காளி கீரை எல்லா இடத்திலும் விளையக்கூடிய ஒரு அமிர்தம்.
அப்படியான சிறப்புகள் கொண்ட மணத்தக்காளி கீரையை வைத்து ரசம் செய்வது எப்படி, அந்த ரசத்துக்கு சுவையூட்ட என்ன பொருட்களை எல்லாம் சேர்க்க வேண்டும் என்பதை செஃப் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
மணத்தக்காளி ரசம் செய்வதற்கு முதலில் ஒரு ரசப்பொடி செய்ய வேண்டும். அதற்கு முதலில், ஸ்டவ்வைப் பற்ற வைத்து, அதில் வறுப்பதற்கு ஒரு பான் வையுங்கள். அதில் 1 டேபிள்ஸ்பூன் மிளகு போடுங்கள், 1 1/2 டேபிள்ஸ்பூன் சீரகம் போடுங்கள், 1 டேபிள்ஸ்பூன் கடுகு போடுங்கள். இந்த மூன்றையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து ஸ்டவ்வில் வையுங்கள், அதில் 2 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றுங்கள், அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம், 4-5 காய்ந்த மிளகாய் போடுங்கள். வறுத்த பிறகு, 1 தக்காளியைக் கட் பண்ணி போடுங்கள்.
அதில் 1 கட்டு மணத்தக்காளி கீரையை ஆய்ந்து கழுவி கட் பண்ணி போடுங்கள். 2 பிரட்டு பிரட்டி வதக்கி, அரிசியை 2வது முறையாகக் கழுவும்போது வரும் கழனி தண்ணீர் ஒரு கப் ஊற்றுங்கள். இது நன்றாக வேகும்போது, கால் ஸ்பூன் மஞ்சள்தூள் போடுங்கள், ரசத்திற்கு தேவையான அளவு உப்பு போடுங்கள். நன்றாகக் கலக்கிவிடுங்கள், நன்றாக வேக வையுங்கள்.
நன்றாகக் கொதித்து வேகும்போது, அதில் நாம் ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள ரசப்பொடியை கோபுரமாக 1 டேபிள்ஸ்பூன் அளவு போடுங்கள். அடுத்து அரை டேபிள்ஸ்பூன் பெருங்காயம் போடுங்கள். அடுத்து 150 மி.லி தேங்காய் பால் ஊற்றுங்கள். உடனே கேஸ் ஸ்டவ்வை ஆஃப் செய்து விடுங்கள். நன்றாகக் கலக்கிவிடுங்கள். அவ்வளவுதான் மணத்தக்காளி கீரை ரசம் தயார்.