150 வருடம் பழமையான ரெசிபி, இது மாங்கல்ய பால். முன்பு திருமணங்களுக்கு முந்தைய நாளில் இது பெண் வீட்டார் செய்து, மாப்பிளை வீட்டாருக்கு கொடுப்பார்கள். இந்த மாங்கல்ய பால் ரெசிபியை நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – அரை கிலோ
துருவிய தேங்காய் – 2 முழுதாக
கருப்பட்டி– ¾ கிலோ
ஏலக்காய் – 10
250 எம்.எல் தண்ணீர்
செய்முறை: பச்சரியை நன்றாக அரைத்துகொள்ளவும். பச்சரிசியை நாம் அரை மணி நேரம் அரைத்துகொள்ளவும். தொடர்ந்து தேங்காயின் முதல் பாலை எடுத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் அரைத்த பச்சரியை, ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதில் தேங்காய் பால் ஊற்றவும். இதை தொடர்ந்து கிளர வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், கருப்பட்டி சேர்த்து நன்றாக கரைத்துகொள்ளவும். இதை வடிகட்டி, இதை பச்சரிசி அரைத்தது, தேங்காய் பாலில் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை கிளர வேண்டும். 10 நிமிடங்கள் வரை நாம் கிளர வேண்டும். தொடர்ந்து ஏலக்காய்யை இடித்து சேர்த்துகொள்ளவும்.