கர்ப்பிணிகளுக்கு நல்லது.. புளிப்பு மாங்காய் சட்னி ரெசிபி இதோ!

இஞ்சி, பூண்டு, மாங்காய் சேர்த்த புளிப்பு மாங்காய் சட்னி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

இஞ்சி, பூண்டு, மாங்காய் சேர்த்த புளிப்பு மாங்காய் சட்னி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
கர்ப்பிணிகளுக்கு நல்லது.. புளிப்பு மாங்காய் சட்னி ரெசிபி இதோ!

மாங்காய், மாம்பழம் பலருக்கு பிடிக்கும். கோடை காலங்களில் நிறைய கிடைக்கும். மாங்காய் கொண்டு பலவித ரெசிபிகள் செய்யலாம். மாங்காய் சாதம், மாங்காய் ஊறுகாய் எனப் பலவற்றை செய்து சாப்பிடலாம். இப்போது புதுமையாக, எளிதாக மாங்காய் சட்னி கூட செய்யலாம். எப்போதும் செய்யும் தேங்காய் சட்னி போல் இதுவும் ஈஸியாக செய்யலாம். புளிப்பு மாங்காய் சட்னி சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வாந்தி போன்ற உபாதைகள் வருவது குறையும் எனக் கூறுகின்றனர்.

Advertisment

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் – 1 கப்

மாங்காய் – 4 துண்டுகள்

Advertisment
Advertisements

இஞ்சி- சிறிய துண்டு

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் – 1

கடுகு – 1/4 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் மாங்காயை எடுத்து நன்றாக கழுவி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மாங்காய், தேங்காய், உப்பு எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை மிக்ஸியில் இருந்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்க வேண்டும். இப்போது, கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அதை சட்னியில் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் புளிப்பு மாங்காய் சட்னி ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: