மாங்காய் வைத்து பல வித ரெசிபிக்கள் செய்யலாம். பச்சை மாங்காய், மிளகாய், உப்பு வைத்து சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். அதில் வித விதமான ரெசிபி செய்யலாம் கூடுதல் சுவையாக இருக்கும். அந்த வகையில் மாங்காய் சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 1 கப்
தோல் நீக்கி நறுக்கிய மாங்காய் - 10 துண்டுகள்
பச்சை மிளகாய் - 2
கடுகு - கால் டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் நறுக்கிய மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும். அவ்வளவு தான்
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, மீண்டும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலக்கவும். இப்போது சுவையான மாங்காய் சட்னி ரெடி. சுடு சாப்பிட்டிற்கு வைத்து சுவையாக சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil