scorecardresearch

மாம்பழத்தை வைத்து ஜில்லுனு ஒரு ரெசிபி: சுகர் பேஷண்ட்ஸ் நீங்களும் இதை சாப்பிடலாம்

மாம்பழம், துளசி விதைகளை வைத்து இந்த இனிப்பை நீங்கள் செய்யலாம். இதில் சுகர் ப்ரீ இனிப்பூட்டி இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

மாம்பழ டெசர்ட்

மாம்பழம், துளசி விதைகளை வைத்து இந்த இனிப்பை நீங்கள் செய்யலாம். இதில் சுகர் ப்ரீ இனிப்பூட்டி இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

ஒரு முழு மாம்பழம் நறுக்கியது

ஓட்ஸ் அல்லது கார்ன் பிளேக்ஸ்

½ கொழுப்பு குறைவான தயிர்

3 ஸ்பூன் செயற்கையான இனிப்பூட்டி, ( சுகர் ப்ரீ பொடி)

½ எலக்காய் பொடி

குங்குமப் பூ

4 ஸ்பூன் துளசி விதைகள் ( ஊறவைத்தது)

புதினா இலைகள்

செய்முறை : மாம்பழத்தை தோல் நீக்கி, அதை நன்றாக நறுக்கவும். இந்நிலையில் ஒரு பாத்திரத்தில், தயிர், சுகர் ப்ரீ பொடி, எலாக்காய் பொடி, குங்குமப் பூ ஆகியவற்றை சேர்த்து நன்றாக கல்லக்க வேண்டும். இதை ஒரு பிளாஸ்டி கவரில் போடவும். அதன் நுனிப்பகுதியை வெட்டி கொள்ளவும்.

இந்நிலையில் உங்களுக்கு தேவையான கிளாசில், கார்ன் பிளேக்ஸ், பிளாஸ்டிக் பையில் உள்ள இனிப்பான தயிர், மாம்பழங்கள், ஊறவைத்த துளசி விதைகளை சேர்க்கவும். தொடர்ந்து எல்லா கிளாசிலும், கார்ன் பிளேக்ஸ், இனிப்பான தயிர், ஊறவைத்த துளசி,மாம்பழங்களை போட வேண்டும். கிளாசில் இடம் அதிகமாக இருந்தால் இதை மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Mango desert in summer days

Best of Express