mango flower benefits, சிறந்த கனியாக கருதப்படும் மாம்பழம் அனைவருக்கு பிடித்த கனியாகும் . அதுபோலவே மாங்காயும் அனைவருக்கும் பிடித்ததுதான். ஆனால் மா மரத்தின் பூவிற்கும் அதிக நன்மைகள் இருக்கிறது. மாம் பூவின் அருமையான வாசனைக்காகவும் அதன் சுவைக்காகவும் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இதை சாப்பிடுகிறார்கள். ஆனால் மாம் பூவிற்கு மருத்துவ குணம் இருக்கிறது என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.
இந்த பூக்களில் அமினோ ஆசிட், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அதேவேளையில் பல நோய்கள் உருவாகாமலும் தடுக்க உதவுகிறது.
படை அல்லது எக்ஸிமா (eczema )
ஆயுர்வேத ஆய்வுகளின்படி படை நோயை மாம் பூக்கள் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. மாம் பூவை கொதிக்க வைத்த நீரில் கலந்து அதில் சர்க்கரை மற்றும் சாதாரண தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும் . இது படை நோய்க்கு சிறந்த மருந்தாக இருப்பதாக ஆயுர்வேத ஆய்வுகள் கூறுகின்றன.
வாய்ப்புண்களை தடுக்கும்
மாம்பூவின் சாறு வாய்ப்புண்கள் ஏற்படாமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் வாய்ப்புண்கள் உருவாகாமலும் தடுக்க உதவுகிறது.
பல் வலி மற்றும் வீக்கம்
காலேட் ( Gallate ) என்ற சத்து வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் மாம் பூவை கொதிக்கும் நீரில் கலந்து வடிகட்டிய பின், அந்த நீரை பருகினால் பல் வலி குணமடையும் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பற்களின் ஈறுகள் வலுவாக இருப்பதற்கும் உதவும் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோய் மற்றும் ஜீரணப் பிரச்சனைகள்
மாம்பூவில் உள்ள மான்கிஃபெரின் (mangiferin) என்ற சத்து இன்சுலின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் மேலும் கொழுப்பை குறைக்க உதவும். சில ஆய்வுகளின்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாம்பூவின் பொடியை நீரில் கலந்து குடித்தால் உடலில் சக்கரை அளவு சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபோல ஜீர்ண மண்டலம் சிறப்பாக செயல்பட மாம்பூ உதவுகிறது என்றும் ஆய்வுகள் கூறிகின்றன. சூடினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தவும் உதவுதாக கூறப்படுகிறது.
எப்படி சாப்பிடலாம்
கொதிக்கும் நீரில் கந்து மாம்பூவை சாப்பிடலாம். அதுபோல் இரவு முழுவதும் நீரில் ஊரவைத்து காலையில் அதை வடிகட்டி அந்த நீரை பருகலாம். சிலருக்கு மாம்பூவை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்பட்டால் மாம்பூவை சாப்பிடுவதை தவிர்ப்பது அவசியம்