சம்மர் ஸ்டார்ட் ஆகிடுச்சி. இந்த சம்மரில் குடிக்கிறதுக்கு ஏற்ற மாதிரி ஒரு மாம்பழ ப்ரூட்டி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதனை ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
அல்போன்சா மாம்பழம் மாங்காய் - 1 கப் சர்க்கரை - 1 கப் (250 மி.லி) தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை:
Advertisment
Advertisements
மாம்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மாங்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழம், மாங்காய், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
பின்பு வடிகட்டி நன்கு ஆறவிடவும். பிறகு வேகவைத்த மாம்பழத்தை விழுதாக அரைத்து கொள்ளவும். பின்பு மாம்பழம் வேகவைத்த தண்ணீரில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு மறுபடியும் கலந்த வைத்த மாம்பழ கலவையை வடிகட்டி, பின்பு பரிமாறவும். அருமையான மாம்பழ ப்ரூட்டி தயாராகிவிடும்.