கோடை காலத்தில் மாம்பழ சாப்பிட அனைவருக்கு அவ்வளவு ஆசையாக இருக்கும். இனிப்பு சுவைகொண்ட மாம்பழ சீசன் எப்போ வரும் என காத்திருப்போம். மாம்பழத்தில் பல ஆராக்கிய நன்மைகள் உள்ளன.
Advertisment
மாம்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான மண்டலத்தை திறம்பட செயல்பட வைக்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.
மாம்பழங்களில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் ஈ மற்றும் பாலிஃபீனால் நிரம்பியுள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.
மாம்பழத்தில் உள்ள ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புற ஊதா கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கும்.
Advertisment
Advertisements
மாம்பழத்தில் குர்செடின், ஃபிசெடின், ஐசோகுவர்சிட்ரின், அஸ்ட்ராகலின், கேலிக் அமிலம் மற்றும் மெத்தில் காலேட் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த பண்புகள் அனைத்தும் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் லுகேமியா ஆகியவற்றிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கின்றன.
மாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பெக்டின் உள்ளது, இது அதிக கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் சரியான பழமாகும்.
ஆனால், மாம்பழங்கள் இயற்கையான சர்க்கரையைக் கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அதை உட்கொள்வது நல்லதல்ல என்று பலர் நம்புகிறார்கள்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மாம்பழம் நல்லதா?
மாம்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.
மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன என்பது சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) படி, நார்ச்சத்து ஒட்டுமொத்த இரத்த சர்க்கரை தாக்கத்தை குறைக்கிறது மற்றும் உங்கள் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது.
மேலும் மாம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறது என்று தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
மாம்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, எனவே இரத்தத்தில் சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு 1-2 துண்டு மாம்பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. மேலும், உங்கள் உணவுக்குப் பிறகு ஒரு பரிசோதனையை மேற்கொள்வது நல்லது, இதன் மூலம் மாம்பழம் உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“