வீட்டிலேயே மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையானவை
பழுத்த பெரிய மாம்பழம் – 2
பால் – 1 கப்
வெண்ணிலா ஐஸ்கிரீம் – 1
ஜெல்லி – 2 டீஸ்பூன்
செய்முறை
பாலை நன்கு காய்ச்சி குளிர வைக்கவும். மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும். பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.
பின்னர் வெளியே எடுத்து அதன் மேல் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும். அவ்வளவு தான் சிம்பிள், சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“