மாங்காய் இட்லி கேள்விப்பட்டுள்ளீர்களா? சுடச் சுட 10 நிமிடத்தில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு அரைத்தது - தேவையான அளவு
பழுத்த மாங்காய் – 1
தேன் – 100 கிராம்
செய்முறை
முதலில் மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். அடுத்து இட்லி மாவில் தேன் சேர்த்து மாங்காய் கலவையையும் சேர்க்கவும். இப்போது அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து இந்த கலவை சேர்த்து ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மாங்காய் இட்லி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“