மாம்பழத்தின் நிறத்தை வைத்து அது எப்படி பழுக்க வைக்கப்பட்டது என்று தெரிந்து கொள்ள முடியாது என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகிறார். மேலும் மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்குவது என்றும் அவர் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். டாக்டர் கார்த்திகேயனின் கூற்றுப்படி, மாம்பழத்தின் நிறத்தை வைத்து அது பழுக்க வைக்கப்பட்ட முறையைத் தெரிந்து கொள்ள முடியாது. பழுத்த மாம்பழத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர் சில குறிப்புகளை கூறுகிறார்.
Advertisment
மாம்பழத்தின் காம்புப் பகுதியை முகர்ந்து பார்த்தால் நல்ல வாசனை வர வேண்டும். ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில் இந்த வாசனை இருக்காது. மேலும், மாம்பழத்தை லேசாக அழுத்திப் பார்த்தால் அது சற்று மிருதுவாக இருக்க வேண்டும்.
டாக்டர் கார்த்திகேயன் ஒரு ஆராய்ச்சியை வைத்து கூறுகையில் அதன்படி, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நான்கு வாரங்களுக்கு மாம்பழம் கொடுத்துப் பார்த்ததில், அவர்களின் உடல் எடை குறைவதற்கு உதவியதாகக் கூறுகிறார்.
மாம்பழம் சாப்பிட்ட பிறகும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். மாம்பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை வேகமாக ஏற விடாமல் பார்த்துக்கொள்ளும். மாம்பழம் பிரட்டைக் காட்டிலும் நல்லது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
Advertisment
Advertisements
இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் சத்துக்கள் கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. வெயில் காலங்களில் கூட இது நம்மைப் பாதுகாக்கிறது. மாம்பழத்தை ஜூஸாக சாப்பிடுவதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவதுதான் நல்லது. குழந்தைகளுக்குப் பால், மாம்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம். ஆனால் கடைகளில் விற்கும் மாம்பழச் சாறுகளைக் கொடுக்கக் கூடாது.
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிய மாம்பழமாக இருந்தால் ஒன்றைச் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரை மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழம் சாப்பிடும்போது சர்க்கரை நோயாளிகள் அதனுடன் நட்ஸ் அல்லது விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி செய்பவர்கள் ஸ்நாக்ஸ் நேரத்தில் இதைச் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.