தேவையான பொருட்கள்
பழுத்த மாம்பழம் - 1
சர்க்கரை - 1 கப்
மாம்பழ எசன்ஸ் - சிறிதளவு
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
செய்முறை
முதலில் மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி சதை பகுதியை மட்டும் எடுக்கவும். மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து மாம்பழத்தை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும். அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி விடவும்.மாம்பழ கலவை திக்கான பதம் வரும் போது இஞ்சி துருவல், மாம்பழ எசன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும். இஞ்சி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது ஒரு தட்டில் ஜாமை கொஞ்சம் ஊற்றுங்கள். அது தண்ணீர் போல் ஓடாமல் கெட்டியாக இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விடலாம். ஜாம் நன்றாக ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும். அவ்வளவு தான் சுவையான தித்திப்பான மாம்பழ ஜாம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“