முழுதாக பழுத்த மாம்பழத்தை நீங்கள் இதற்கு பயன்படுத்தக் கூடாது, பழுக்க தொடங்கும் மாங்காய் அல்லது பச்சை மாங்காயை இந்த பாயாசம் செய்ய பயன்படுத்தவும்.
தேவையான பொருட்கள்
கிளி மூக்கு மாங்காய் – 5
ஜவ்வரிசி – 1 கப்
பால்- 3 லிட்டர்
அரை லிட்டர் தண்ணீர்
பாதாம் – 25 கிராம் துருவியது
முந்திரி- 25 கிராம்
திராட்சை : 15 கிராம்
சர்க்கரை – 1 கப்
ஏலாக்காய் இடித்தது
நெய்
செய்முறை: மாங்காயை நன்றாக கழுவ வேண்டும். தோலை மூழுவதுமாக நீக்கிய பிறகு துருவிக்கொள்ளவும். தொடர்ந்து ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து பால் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் தண்ணீர் சேர்த்துகொள்ளுங்கள். பால் நன்றாக பாதியாக வேண்டும். தொடர்ந்து ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக வேக விட வேண்டும். தொடர்ந்து மாங்காய் துருவலை சேர்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். தொடர்ந்து அதில் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலந்துவிட வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்ததும், துருவிய பாதமை சேர்க்க வேண்டும். தொடர்ந்து நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பாயாசத்தில் சேர்க்க வேண்டும். சூப்பரான மாங்காய் பால் பாயசம் ரெடி .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“