கோடை சீசன் ஆரம்பித்து விட்டது. இனி என்ன சீசனுக்கு ஏற்ற மாம்பழம் இனி எல்லோர் வீட்டிலும் இருக்கும். சுவையான மாம்பழத்தை வைத்து வீட்டிலேயே மாம்பழம் பாயாசம் செய்ய வேண்டியது தான். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஆனால் தித்திப்பாக இருக்கும் இந்த மாம்பழம் பாயாசம்.
இதுவரை செய்யவில்லை என்றால் என்ன இன்னி மாம்பழம் சீசனுக்கு ஏற்ற மாதிரி சுவையாக மாம்பழம் பாயாசம் ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
மாம்பழ விழுது
பால் - 1 லிட்டர்
வேகவைத்த ஜவ்வரிசி
சர்க்கரை
ஏலக்காய் தூள்
சேமியா
முந்திரி பருப்பு
குங்குமப்பூ
திராட்சை
நெய்
செய்முறை
ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுக்கவும். அதே கடாயில் மேலும் சிறிது நெய் சேர்த்து அரை கப் சேமியா வறுக்கவும்.
ஒரு சாஸ் பானில், ஒரு லிட்டர் பால் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள சேமியா சேர்த்து வதக்கவும். வேகவைத்த ஜவ்வரிசியை கால் கப் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
இப்போது அரை கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் கலக்கவும் மற்றும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் மற்றும் சில குங்குமப்பூவையும் சேர்க்கவும். நல்ல வாசனையாகவும் நிறமாகவும் இருக்கும். இதில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்க்கவும்.
மாம்பழ பாயசம் | Mango Payasam Recipe In Tamil | Dessert Recipes | Mango Recipes |
பின்னர் அடுப்பை அணைத்து ஆறவிடவும். முழுமையாக ஆறியதும், மூன்று கப் மாம்பழ ஜூஸ் கூழ் மாதிரி கரைத்து சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் மேலே நறுக்கிய பிஸ்தா மற்றும் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறலாம்.