2024ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், உணவு பட்டியலில் மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்றுதான் அதிகமான மக்களால் தேடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள், படங்கள், உணவு வகைகள் அடங்கிய பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் பிரபலமான உணவு தேடல்கள் குறித்த கூகுள் வெளியிட்டுள்ள பட்டியலில் மாங்காய் ஊறுகாய் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
மாங்காய் என்பது நம்மில் பலருக்கும் பிடிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் மாம்பழ சீசன் நிலவும்போது மாம்பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் மாங்காய் ஊறுகாய் போடுவதும் வழக்கமான ஒன்றாகும். அந்தவகையில், மாங்காய் ஊறுகாய் போடுவது எப்படி என்றும் இந்தியர்கள் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
இந்த பட்டியலில் கஞ்சி 8 ஆவது இடம் பிடித்துள்ளது. அதேபோல தேடுதல் பட்டியலில் மாங்காய் ஊறுகாய் முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“