நாவூறும் சுவை; பாட்டி காலத்து சீக்ரெட்... மாங்காய் ஊறுகாய் இப்படி செஞ்சு பாருங்க; ரொம்ப நாள் கெடாமல் இருக்கும்!

பாட்டி காலத்தில் செய்ததுபோலவே சுவையை கொஞ்சம் கூட்டி மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பாட்டி காலத்தில் செய்ததுபோலவே சுவையை கொஞ்சம் கூட்டி மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
mango pickle

மாங்காய் சீசன் வந்துவிட்டது. இனி என்ன மாங்காயை வைத்து சுவையான ஊறுகாய் எப்படி போடுவது என்று இனி கற்றுக்கொள்ளுங்கள். 6 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாமல் சேமித்து வைக்கும் அளவிற்கு மாங்காய் ஊறுகாய் செய்வது பற்றி டீ கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

மாங்காய் - 1 கிலோ 
மஞ்சப்பொடி - 1 டீஸ்பூன் 
உப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
தனிக்கடுகு - 2 டேபிள்ஸ்பூன் 
வெந்தயம் - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
நல்லெண்ணெய் - 150ml 
பூண்டு - 15 பல் 
கருவேப்பிலை - சிறிதளவு 
மிளகாய் வத்தல் பொடி - 50 கிராம் 
பெருங்காயப்பொடி - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை பழம் - 1 

செய்முறை

Advertisment
Advertisements

அரிசி மாங்காய் வாங்கி பாரம்பரிய முறைப்படி கைமணம் மாறாமல் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் மாங்காயை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் அதனை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். 

உங்களுக்கு தேவையான வடிவத்தில் இதனை நறுக்கிக் கொள்ளலாம். இந்த மாங்காயை ஒரு பவுலில் சேர்த்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். 

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். பின்னர் இதனை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஊறுகாய் நல்லெண்ணையில் செய்தால் சுவையாக இருக்கும் எனவே ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு பொரிய விடவும். 

அடுத்தது பூண்டு 1 நிமிடம் வதங்கி வந்ததும் கருவேப்பிலையையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்ததாக அடுப்பை அணைத்துவிட்டு அதில் மிளகாய் துளை சேர்த்து எண்ணெயில் கலந்து விடவும். பெருங்காயத்தூள் சேர்த்து கலந்ததும் இந்த சூடான எண்ணெய் கலவையை எடுத்து ஊறவைத்து வைத்துள்ள மாங்காயில் போட்டு கைப்படாமல் பிரட்டவும். 

பின்னர் அரைத்து வைத்த பொடியையும் மேலே தூவவும். சுவையை இன்னும் கூட்ட எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால் சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி ஆகிவிடும்.

Vegetables pickles that are really good raw mango

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: