இந்த சீசனில் மிஸ் பண்ணக்கூடாத டிஷ்... அடுத்த வருசம் வரை கெடாது: மாங்காய் தொக்கு இப்படி ட்ரை பண்ணுங்க!

ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாத வகையில் மாங்காய் தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த தொக்கு செய்வதற்கு அடுப்பில் வதக்க வேண்டிய அவசியம் தேவையில்லை.

ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாத வகையில் மாங்காய் தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த தொக்கு செய்வதற்கு அடுப்பில் வதக்க வேண்டிய அவசியம் தேவையில்லை.

author-image
WebDesk
New Update
மாங்காய் தொக்கு

சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும். 

Advertisment

அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது. ஆனால் இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயை வைத்து சுவையான ரெஸிபி செய்ய கற்றுக்கொள்ளுங்கள். 

மாங்காய் தொக்கு செய்தால் அடுப்பில் போட்டு கிளறுவார்கள். இதனால் இரண்டு மாதங்களிலேயே இவை கெட்டுப் போகும். ஆனால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத மாதிரி அடுப்பில் வைக்காமல் ஒரு மாங்காய் தொக்கு எப்படி செய்வது என்று ராதா ராம ராவ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

மாங்காய் 
மிளகாய்த்தூள்
மஞ்சள் தூள்
உப்பு
கடுகு
நல்லெண்ணெய்
வெந்தயம்

செய்முறை

மாங்கா தொக்கு செய்ய ஏதாவது ஒரு வகை மாங்காவை எடுத்து தோல் சீவி விட்டு காய் சீவுவதில் வைத்து சீவிக்கொள்ளலாம். இல்லை என்றால் பஜ்ஜி போடும் கட்டையில் சீவிக் கொள்ளலாம். பின்னர் இவற்றில் உள்ள ஈரப்பதம் போகும் வரை ஒரு வெள்ளைத்துணியில் போட்டு ஃபேன் காற்றில் உலர்த்தி விடவும். 

அடுத்ததாக ஒரு பாத்திரத்தை தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொண்டு அதில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்க்கவும். பின்னர் மிக்ஸி ஜாரில் பெரிய கடுகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து அதை இந்த மிளகாய் தூளுடன் சேர்த்து கிளறி விடவும். 

இதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டதும் அதில் இந்த மாங்காயையும் சேர்த்து பிரட்டவும். கைப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நல்லெண்ணையை மிதமாக சூடு படுத்தி ஆறவைத்து அதை இந்த மாங்காயில் சேர்த்து கிளறவும். 

எண்ணெய் சிக்கு வாடை அடிக்காமல் இருப்பதற்காக மிதமான சூட்டில் அதை காய்ச்ச வேண்டியது அவசியம். மாங்காவை அப்படியே ஒரு நாள் முழுக்க மூடி போட்டு வைத்து விட்டால் நான் முழுக்க அது நன்றாக மசாலாவில் ஊறி சுவையாக இருக்கும். இதை ஒரு காற்று புகாத பாத்திரத்தில் சேர்த்து தேவைப்படும்போது கைப்படாமல் எடுத்து பயன்படுத்தலாம்.

raw mango

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: