வெயில் காலம் தொடங்கினாலே, கடுமையான வெயிலை நினைத்து நாம் கவலை கொள்வோம். ஆனால் வெயில் காலத்தில் கிடைக்கும் மாம்பழங்களை நினைத்தால், நமக்கு உற்சாகம் ஏற்படும். மாம்பழங்களில் வைட்டமி சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. மேலும் போலேட், வைட்டமின் கே, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் பி உள்ளது.
நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது. நம் வீட்டு பெரியவர்கள் மாம்பழத்தை தண்ணீரில் போட்டு வைத்திருப்பார்கள். இதை ஒரு பழைய நடைமுறை என்று நாம் ஒதுக்கிவிட முடியாது. இப்படி செய்வதில் அதிக நன்மைகள் இருக்கிறது.
மாம்பழங்களில் பைடிக் ஆசிட் இருக்கிறது இந்த பைடிக் ஆசிட் இரும்பு சத்து, சிங், கால்சியம், ஆகியவற்றை நமது உடல் உள்வாங்கிக்கொள்ளாமல் தடுக்கிறது. இதனால் சத்து குறைபாடு ஏற்படும். இந்நிலையில் நீங்கள் மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்தால், அதிகபடியான பைடிக் ஆசிடை அது நீக்கும்.
இந்நிலையில் மாம்பழங்களில் பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்டிருக்கும். இந்த பூச்சிக்கொல்லிகள் நமக்கு தலைவலி, மலச்சிக்கல் மற்றும் குடல் சமந்தமான நோய்களை உருவாக்கலாம். இதனால் மாம்பழங்களை நாம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மேலும் இந்த பூச்சிக்கொல்லிகள் புற்று நோய் செல்களை கூட உருவாக்கும் அபாயம் கொண்டது.
இந்நிலையில் மாம்பழங்கள், அதிக சூடு தன்மை கொண்டது. இதனால் தர்மோஜெனிஸிஸ் ஏற்படும். இதனால் வயிற்றுப்போக்கு, சருமம் தொடர்பான சீக்கல் உதாரணமாக முகப்பருக்கள் ஏற்படலாம். தண்ணீரில் மாம்பழங்களை ஊற வைத்தால் இது நீங்கும்.
ஊறவைக்க நேரம் குறைவாக இருக்கிறது என்றால், 30 நிமிடங்கள் வரை தண்ணீரில் போடுங்கள். ஆனால் 1 முதல் 2 மணி நேரம் வரை ஊறினால் மிகவும் நல்லது. அதிக நேரம் ஊறவைத்தாலும் தவறில்லை. ஊறிய மாம்பழங்களை நீரில் இருந்து எடுத்து, சிறிது நேரம் கழித்து சாப்பிடுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil