வழக்கமான முறையில் இட்லி செய்யாமல் மாப்பிளை சம்பா அரிசியில் இட்லி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும். எப்போதும் வீட்டில் சமைக்கும் இட்லி தோசைகள் வெள்ளை நிறமாக இருக்க கூடாது.
கருப்பு உளுந்து மற்றும் மாப்பிளை சம்பா போட்டு மாவு அரைத்து இட்லி செய்து சாப்பிடுங்கள். அதுதான் உடலுக்கு அதிக வலு சேர்க்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இதுகுறித்து அவர் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரத சத்து, நார்சத்து, தாதுச்சத்து மற்றும் உப்புச்சத்தும் நிறைந்துள்ளது. உடலுக்கு வலுவையும் பலத்தையும் அளிக்ககூடிய ஏராளமான சத்துகளும் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான குழந்தைபேறு அளிக்கும் சிறந்த அரிசி ஆகும். எனவே மாப்பிளை சம்பா அரிசி உடலுக்கு நல்லது. காலை உணவாக அதில் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் உளுந்து
மாப்பிளை சம்பா அரிசி 5 கப்
பச்சரிசி 1 கப்
செய்முறை
உளுந்தை 3 மணி நேரம் தனியாக ஊற வைக்க வேண்டும். மாப்பிளை சம்பா அரிசி, பச்சரிசி இரண்டையும் சேர்த்து 10 மணி நேரம் தனியாக ஊற வைக்கவும்.
ஆரோக்கியமான இட்லி வேண்டுமா? இதை சேர்த்து செய்யுங்க | Dr.Sivaraman - Healthy idli, dosa
முதலில் நாம் உளுந்தை அரைத்து எடுக்கவும். தொடர்ந்து மாப்பிளை சம்பா மற்றும் பச்சரிசியை சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து உளுந்தையும், மாப்பிளை சம்பா அரிசி அரைத்ததையும் சேர்த்து, உப்பு சேர்க்கவும். தொடர்ந்து இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றி வேக வைக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.