மரவள்ளி கிழங்கு வைத்து சுவையான மற்றும் சூடான அடை எப்படி செய்வது ப்ராவ்ஸ்கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். சாதாரணமாக இந்த கிழங்கை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கூட இதை ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு
பச்சரிசி
கடலைப்பருப்பு
துவரம்பருப்பு
காய்ந்த மிளகாய்
இஞ்சி
பூண்டு
சீரகம்
வெங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
உப்பு
எண்ணெய்
செய்முறை:
பச்சரிசியை தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பை ஒன்றாக அரை மணி நேரம் ஊறவைக்கவும். மரவள்ளிக்கிழங்கை தோலுரித்து, நன்றாக கழுவி, துருவி அல்லது பொடியாக நறுக்கி தயாராக வைக்கவும். ஊறவைத்த பச்சரிசியை களைந்து, நறுக்கிய மரவள்ளிக்கிழங்குடன் சேர்த்து, தண்ணீர் விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது ஊறவைத்த பருப்புடன், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அடை மாவு பதத்திற்கு கொரகொரப்பாக அரைக்கவும். அனைத்து மாவுகளையும் ஒன்றாக கலக்கவும். ஒரு சிறிய கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். இதை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலக்கவும்.
நறுக்கிய கொத்தமல்லித்தழையையும் மாவுடன் சேர்த்து கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.
கல்லில் எண்ணெய் அல்லது நெய் தடவி, ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை போல சற்று தடிமனாக ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடை சுற்றிலும் மற்றும் நடுவிலும் சிறிது எண்ணெய் விடவும். அடையின் இருபுறமும் பொன்னிறமாக, மொறுமொறுப்பாக வேகும் வரை சுடவும்.
சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை தயாரானது. இதை தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது வெண்ணெய் உடன் சூடாக பரிமாறவும். அடையை மிகவும் மெல்லியதாக ஊற்றினால் உடைந்து போக வாய்ப்பு உள்ளது, சற்று தடிமனாக ஊற்றுவது நல்லது.