மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் சி உள்ளது. இது ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட வேண்டிய முக்கிய வைட்டமின். மேலும் இதில் பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்டவைகள் உள்ளன. இத்தனை சத்து நிறைந்த மரவள்ளிக் கிழங்கில் அடை தோசை செய்வது பற்றி பார்ப்போம்.
துருவிய மரவள்ளிக் கிழங்கு – 1 கப்
எப்போதும் தோசைக்கு பயன்படுத்தும் அரிசி – 1/4 கப்
தூள் வெல்லம் – 3/4 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பொடியாக நறுக்கிய முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் எப்போது போல் தோசைக்கு பயன்படுத்தும் அரிசி எடுத்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். அதில் நறுக்கிய மரவள்ளிக் கிழங்கு சேர்த்து அரைத்து எடுக்கவும். அதோடு மற்ற பொருட்கள் அனைத்தையும் வெல்லம், தேங்காய்த் துருவல், முந்திரி, ஏலப்பொடி உள்ளிட்டவைகளை கடாயில் நெய் சேர்த்து வறுக்கவும். இதை அரைத்த மாவில் சேர்த்து விடவும்.
இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து எப்போதும் போல் தோசை சுட்டு எடுத்தால் சுவையான மரவள்ளிக் கிழங்கு அடை தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“