ரத்தத்தை டெய்லி சுத்தம் செய்யும்... வாரத்தில் 2 முறை சாப்பிட வேண்டிய குழம்பு: செஃப் தீனா ரெசிபி
நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்து குழம்பு எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதற்கான செய்முறை விளக்கம் சமையற்கலைஞர் தீனா யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்து குழம்பு எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதற்கான செய்முறை விளக்கம் சமையற்கலைஞர் தீனா யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவே மருந்து என்ற கூற்றின் அடிப்படையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அந்த வகையில் நம் வீட்டு கிச்சனில் இருக்கும் சாதாரண பொருட்கள் மூலமாக சுவை மிகுந்த மருந்து குழம்பு எவ்வாறு தயாரிக்கலாம் என்று இதில் காணலாம். இதனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
தேவையான பொருட்கள்:
மல்லி - 4 டீஸ்பூன், வரமிளகாய் - 6, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், ஓமம் - 2 டீஸ்பூன், மஞ்சள் - 1 இஞ்சி - 100 கிராம், பூண்டு - 100 கிராம், வெந்தயம் - அரை டீஸ்பூன், உளுந்தப் பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, புளி - தேவையான அளவு, கறிவேப்பிலை - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு மற்றும் நல்லெண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் சேர்க்காமல் மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், ஓமம், மஞ்சள், உளுந்தப் பருப்பு, கடுகு மற்றும் பெருங்காயம் ஆகிய அனைத்து பொருட்களையும் சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பின்னர், இவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
இப்போது, அதே பாத்திரத்தில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வறுத்து, தனியாக வைத்திருக்கும் பொருட்களுடன் சேர்க்க வேண்டும். இவற்றுடன் இஞ்சியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
இனி, அடுப்பில் கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் கடுகு, உளுந்தப் பருப்பு, வெந்தயம், வரமிளகாய், பூண்டு ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும். இவை பொறிந்து வரும் போது, முதலில் அரைத்து வைத்திருந்த கலவையை இதில் சேர்க்கலாம்.
இவை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கும் போது, புளி கரைசல் ஊற்ற வேண்டும். இதையடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும். இது ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இவ்வாறு செய்தால் சுவையான மருந்து குழம்பு தயாராகி விடும்.