நம்ம நாட்டில் விளையக்கூடிய ஒரு கீரையுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு கேரட்டை விட பல ஆயிரம் மடங்கு சிறந்தது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அது என்ன கீரை, அதில் எப்படி சூப் செய்வது என்று பார்ப்போம்.
மருத்துவர் கு. சிவராமன் தமிழ்நாட்டில் உணவு மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பி வருகிறார். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், சித்த மருத்துவம் மற்றும் மரபு உணவு சார்ந்து வெளிநாடுகளில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம், மலாயா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஆய்வு உரை நிகழ்த்தியுள்ளார்.
நம் நாட்டில் விளையக்கூடிய முருங்கைக் கீரையின் பயன்களைப் பற்றி மருத்துவர் கு. சிவராமன் கூறியுள்ளார்.
நம் நாட்டில் விளையக்கூடிய முருங்கைக்கீரை கேரட்டை விட பல ஆயிரம் மடங்கு கண்ணுக்கு நல்லது. முருங்கைக் கீரை அந்த அளவுக்கு கண் பார்வைக்கு தேவையான சத்துக்களை கொடுக்கக்கூடியது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
முருங்கைக் கீரையை ஒரு சூப் மாதிரி செய்து சாப்பிடலாம். முருங்கைக் கீரையை நன்றாக வேக வைத்து, அந்த தண்ணீருடன் சின்ன வெங்காயம், வெள்ள பூண்டு சேர்த்து போட்டு வேக வைத்டு அந்த சூப்பை காலை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் நிறைய பேருக்கு ரத்த கொதிப்பு குறைவதற்கு உதவுகிறது என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
முருங்கைக்கீரை சூப்பை இரத்த கொதிப்பு நோயாளிகள் அன்றாடம் சாப்பிட வேண்டிய ஒன்று. முருங்கைக் கீரைக்கு இணையான விலை உயர்ந்த ஒரு காயை கூட நம்மால் தேட முடியாது. அவ்வளவு சிறப்பான ஒரு கீரை முருங்கைக்கீரை என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.