/indian-express-tamil/media/media_files/2025/05/03/4t2gbGS8l0kClhH1Toar.jpg)
Chef Venkatesh Bhat Masala bomb snack
நாம் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய, அதே சமயம் ஆரோக்கியமான மசாலா பாம்ப் ஸ்நாக்ஸ் ரெசிபி இங்கே. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ
தேவையான பொருட்கள்
அவல் - 250 கிராம் (தடித்த அவல் சிறந்தது)
உப்மா ரவை - 4டேபிள் ஸ்பூன்
தயிர் - சுமார் 350 கிராம் (சுமார் 10 டேபிள்ஸ்பூன்)
கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் / நெய் / விருப்பமான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் (ஆவியில் வெந்த பின் தடவ)
தாளிப்பதற்கு
நெய் / விருப்பமான எண்ணெய் - 4டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
பெருங்காயம் - அரை ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
கொத்தமல்லி – அலங்கரிக்க
செய்முறை
முதலில் 250 கிராம் அவலை மூன்று முறை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். அவல் கழுவும்போது ஈரப்பதத்தை உறிஞ்சும், இந்த ஈரப்பதமே போதுமானது.
கழுவிய அவலுடன் 4 தேக்கரண்டி உப்மா ரவை சேர்க்கவும்.
இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறகு கெட்டியான தயிர் சேர்க்கவும். கெட்டித் தயிர் சேர்ப்பதால் கலவை நன்றாக வரும். அனைத்தையும் சப்பாத்தி அல்லது பூரி மாவு பதத்திற்கு நன்றாகப் பிசைந்து கொள்ளவும். அதை தனியாக 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தயிர் ரவையை மென்மையாக்கி, கலவை மாவு போல் திரண்டு வரும்.
இப்போது இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
ஊறிய அவல் கலவையை சிறிய அல்லது மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
இட்லிச் சட்டியில் தண்ணீர் சூடானதும், உருட்டிய அவல் உருண்டைகளை கவனமாக வைக்கவும்.
மூடி போட்டு 8 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக ஆவியில் வேக வைக்கவும்.
ஆவியில் வெந்த உருண்டைகள் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் இருக்க, ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும்.
இப்போது அடுப்பிலிருந்து இறக்கி 5 நிமிடங்கள் ஆற வைக்கவும்.
தாளிதம்:
தடிமனான அடிப்பகுதியுள்ள கடாயில் 4 தேக்கரண்டி நெய் ஊற்றவும்.
நெய் சூடானதும், 4 காய்ந்த மிளகாய், அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும், கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
பிறகு அரை ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் பெருங்காயம் மற்றும் 2 ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து நன்றாகக் கிளறவும். மசாலா கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
உடனடியாக ஆவியில் வெந்த உருண்டைகளைச் சேர்த்து கடாயின் சூட்டிலேயே மெதுவாகப் புரட்டவும், மசாலா எல்லா உருண்டைகளிலும் நன்றாகப் படியும்.
கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும்.
இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். இதில் எந்தவிதமான ஆரோக்கியமற்ற பொருட்களும் சேர்க்கப்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.