மீல் மேக்கரை நாம் பிரியாணியில் பயன்படுத்துவோம். இதுபோல சோயா கட்லேட் செய்யவும் பயன்படுத்துவோம். தற்போது வழக்காமன வடையை இது வைத்து செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர்- 100 கிராம்
பொட்டு கடலை மாவு- ½ கப்
வெங்காயம் நறுக்கியது
கரம் மசாலா
கறி மசாலா
இஞ்சி பூண்டு விழுது
சோம்பு
சீரகத்தூள்
மஞ்சள் தூள்
சோள மாவு
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு
செய்முறை
ஒரு கிண்ணத்தில், பொட்டு கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், கறி மசாலா, இஞ்சி பூண்டு விழுதி, பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா கொத்தமல்லி, கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். இதில் தண்ணீர் சேர்த்து பிசையவும். தொடர்ந்து உப்பு போட்டு வேக வைத்த பொடியாக நறுக்கிய மீல் மேக்கரை சேர்த்து வடை தட்டும் பதத்திற்கு தயார் செய்யவும். தொடர்ந்து வடை போல் தட்டி வைத்துகொள்ளவும். அடுப்பில் எண்ணெய் வைத்து சூடானதும் பொறித்து எடுக்கவும்.