இட்லி மாவில் சுவையான சாஃப்டான மெது வடை செய்வது குறித்து இங்கு பார்க்கலாம். 7 பொருட்கள் தான் 5 நிமிடத்தில் ஈஸியாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- இட்லி மாவு
- ரவை – 1 1/2 (ஒன்றரை ஸ்பூன்)
- கடலை மாவு – 3 டீஸ்பூன்
- அரிசி மாவு – 1 1/2 (ஒன்றரை ஸ்பூன்)
- வெங்காயம் – 1 கப்
- உப்பு, மஞ்சள், பேக்கிங் சோடா – சிறிதளவு
- மிளகு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் – தேவையான அளவு
செய்முறை
இட்லி மாவில் சாஃப்டான மெது வடை செய்யலாம். அதற்கு முதலில் இட்லி மாவு, புளித்த மாவு வடை செய்ய தேவையான அளவு ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். அதில், மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவு ரவை, கடலை மாவு சேர்க்கவும். அடுத்ததாக, உப்பு, மஞ்சள், பேக்கிங் சோடா சிறிதளவு சேர்க்கவும். வெங்காயம் ஒரு கப் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, மிளகு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும். வெங்காய இலை வேண்டும் என்றால் சேர்த்துக் கலக்கவும். அவ்வளவு தான். இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். எப்போதும் போல் வடை தட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். பொன்னிறமாக வந்தப்பின் திருப்பி போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சூடான, சுவையான இட்லி மாவு மெது வடை ரெடி. ஸ்மைல் சிச்சன் யூட்யூப் சேனலில் இந்த ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/