காலை கடன் சுமுகமாக போகும்... வைட்டமின் சி நிறைந்த இந்தப் பழம்; விதையுடன் அப்படியே சாப்பிடுங்க: உணவியல் நிபுணர் தாரிணி
கொய்யாப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து உணவியல் நிபுணர் தாரிணி விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கக் கூடிய ஆற்றில் இதில் காணப்படுகிறது.
கொய்யாப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து உணவியல் நிபுணர் தாரிணி விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கக் கூடிய ஆற்றில் இதில் காணப்படுகிறது.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
Advertisment
கொய்யாப் பழம் நமது செரிமான மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது என்று உணவியல் நிபுணர் தாரிணி கூறுகிறார். குறிப்பாக, இதில் இருக்கும் விதைகள் கூட மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கொய்யாப் பழங்களை விதையுடன் சாப்பிடலாம் என்று டாக்டர் விகடன் யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
வைட்டமின் சி நிறைந்துள்ளதால், கொய்யாப்பழம் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கவும், நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் இது உதவுகிறது.
கொய்யாப் பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல தேர்வாக கருதப்படுகிறது.
Advertisment
Advertisements
கொய்யாப் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்தப் பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் காணப்படுகிறது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் உணர வைத்து, அதிகப்படியான உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. இதனால் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டியாகும்.
மேலும், கொய்யாப் பழத்தில் உள்ள சில ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பாதுகாக்கின்றன. இது சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தைக் குறைத்து, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.