கேரட்டை விட 4 மடங்கு அதிக வைட்டமின் ஏ: இந்த கீரையை இப்படி பொடி செஞ்சு சாப்பிடுங்க: டாக்டர் அஸ்வின் விஜய்
முருங்கைக் கீரையில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று மருத்துவர் அஸ்வின் விஜய் தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தற்போது பார்க்கலாம்.
10 கிலோ கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின், ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையில் அதிகமாக இருக்கிறது என மருத்துவர் அஸ்வின் விஜய் கூறியுள்ளார். மேலும், கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் ஏ முருங்கைக் கீரையில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முருங்கைக் கீரையை இளசாக இருக்கும் போது தான் பயன்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
மேலும், முருங்கைக் கீரையை முற்றிலுமாக வேகவைத்து சாப்பிடக் கூடாது எனவும், அரைகுறையாக வேக வைத்து தான் சாப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முழுமையாக முருங்கைக் கீரையை வேகவைத்து சாப்பிட்டால் வயிறு வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இளசாக இருக்கும் முருங்கைக் கீரையை பொடியாக எப்படி சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய், உளுந்து, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பெருங்காயம், சின்ன வெங்காயம், முருங்கைக் கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய், புளி, உப்பு
Advertisment
Advertisements
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் உளுந்து சேர்க்க வேண்டும். இத்துடன் இரண்டு பச்சை மிளகாய்கள், ஒரு துண்டு இஞ்சி மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
இவை வதங்கியதும் சிறிதளவு பெருங்காயம், 8 சின்ன வெங்காயங்கள் சேர்த்து மீண்டும் வறுக்க வேண்டும். ஒரு கப் முருங்கைக் கீரை, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இறுதியாக அரை கப் தேங்காய் துருவல், சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.