ஹெல்தி லஞ்ச் ரெசிபி... காரம் கம்மி; டேஸ்ட் ஜாஸ்தி; ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

காரம் கம்மியா போட்டு வெஜிடபுள் ரைஸ் லஞ்ச் பாக்ஸ்க்கு எப்படி டேஸ்டியாக செய்வது என்று பார்ப்போம்.

காரம் கம்மியா போட்டு வெஜிடபுள் ரைஸ் லஞ்ச் பாக்ஸ்க்கு எப்படி டேஸ்டியாக செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
vegetable rice

உங்கள் குழந்தைகள் மதிய உணவு பார்த்ததும் மகிழ்ச்சியடைய வேண்டுமா? அப்படியானால், இந்த சுவையான காய்கறி பிரியாணியை முயற்சி செய்யுங்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக மாறிவிடும். இதை எப்படி செய்வது என்று மாம் ஆஃப் பாய்ஸ் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

நெய் மற்றும் எண்ணெய் - 50 கிராம்
வெங்காயம் - 3  
பச்சை மிளகாய் - 3 
வாசனைப் பொருட்கள் (பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்றவை)
இஞ்சி-பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 2 பெரியது  
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு 
புதினா, கொத்தமல்லி 
சோயா சங்க்ஸ் 
உப்பு 
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
கெட்டியான தயிர் - 1 கரண்டி
பாஸ்மதி அரிசி - 1 கப்  
எலுமிச்சைப் பழம்  

செய்முறை:

Advertisment
Advertisements

ஒரு பெரிய பாத்திரத்தில் 50 கிராம் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதில் நறுக்கிய மூன்று வெங்காயம், மூன்று பச்சை மிளகாய் மற்றும் வாசனைப் பொருட்கள் (ஹோல் ஸ்பைசஸ்) சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.

இஞ்சி-பூண்டு விழுது சேர்த்தல்: வெங்காயம் வதங்கியதும், 1 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இப்போது இரண்டு பெரிய அளவிலான தக்காளியை சேர்த்து, பாதி வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி, மற்றும் ஒரு கைப்பிடி சோயா சங்க்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெயிலேயே வதக்குங்கள்.

அடுத்து, ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா, மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பிரியாணி மசாலா சேர்க்கவும். ஒரு கரண்டி கெட்டியான தயிர் சேர்த்துக் கலந்து, நன்கு கிளறவும்.

ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு 1 1/2 பங்கு தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடிவிடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், ஊறவைத்த பாஸ்மதி அரிசியையும், தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து விட்டு மீண்டும் மூடிவிடவும்.

தண்ணீர் மற்றும் அரிசி சம அளவில் வந்ததும், மூன்று டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, பிரியாணி பாத்திரத்தை ஒரு தோசை கல்லின் மேல் வைத்து, குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் தம் போட்டு இறக்கினால், சுவையான காய்கறி பிரியாணி பளபளவென தயாராகிவிடும்.

Briyani Veggie Foods

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: