பொதுவாக மெதுவடை என்றாலே உளுத்தம் பருப்பு மாவில் செய்யப்படும் மெதுவடையைத்தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஒரு மாற்றத்துக்கு, புது முயற்சியாக, இட்லி மாவில் மெதுவடை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த முறை தீபாவளிக்கு இப்படி ட்ரை பண்ணி பாருங்க.
வீடுகளில் மெதுவடை சுட வேண்டும் என்று திட்டமிட்டால், அதற்கு என தனியாக உளுத்தம் பருப்பு ஊரவைத்து மாவரைக்க வேண்டும். அதே போல, இட்லிக்கும் மாவரைத்து வைத்திருப்பீர்கள். இரண்டுக்கும் தனித் தனியாக மாவரைப்பது என்பது சற்று சிரமமான கூடுதல் வேலையாக இருக்கலாம்.
நீங்கள் இட்லிக்கும் மெதுவடைக்கும் தனித்தனியாக மாவரைப்பது சிரமமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? கவலைப்பட வேண்டாம், இட்லி மாவே போதும். அதிலேயே இட்லியும் சுடலாம், மெதுவடையும் சுடலாம். இட்லி மாவில் மெதுவடை சுடுவது எப்படி என்று இந்த முறை தீபாவளிக்கு ட்ரை பண்ணி பாருங்க.
இட்லி மாவில் மெதுவடை செய்முறை
இட்லி மாவு அரைத்து வையுங்கள். மாவு நன்றாக புளித்த பிறகு, அந்த மாவை நன்றாக கலக்குங்கள். மெதுவடை சுடுவதற்கு தேவையான அளவு மாவு எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் ஒன்றரை டீ ஸ்பூன் ரவை சேர்த்துக்கொள்ளுங்கள்.
3 டீ ஸ்பூன் அளவுக்கு கடலை மாவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
சிறிது மஞ்சள்தூள், சிறிது அளவு உப்பு, சிறிது பேக்கிங் சோடா சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதையடுத்து, மிளகு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கையால் கலக்கி எடுத்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தால் வீட்டில் இருந்தால் சேர்க்கலாம், இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.
அடுத்து, ஒன்றரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் மாவு ரெடி.
இப்போது வழக்கம் போல, வானலியில் எண்ணெயை உற்றி காயவையுங்கள்.
வடை சுடும்போது, மாவை கையில் எடுக்கும்போது, கையில் தண்ணீர் தொட்டுக்கொண்டுதான் எடுக்க வேண்டும். அப்போதுதான் கையில் ஒட்டாமல் சரியாக இருக்கும்.
மெதுவடை நன்றாக வெந்து வந்த பிறகு, வானலியில் இருந்து எடுங்கள். அவ்வளவுதான் மெதுவடை ரெடி. இந்த மெதுவடையை சாப்பிடுபவர்கள் யாருமே இதை இட்லி மாவில் சுட்டதாக சொல்ல மாட்டார்கள்.
உங்களுக்கு வேலைப்பளு காரணமாக சிரமமாக இருந்தால், இனிமேல், நீங்கள் மெதுவடைக்கு என்று தனியாக மாவரைக்கத் தேவையில்லை. இப்படி இட்லி மாவிலேயே மெதுவடை செய்யலாம். இந்த முறை தீபாவளிக்கு ட்ரை பண்ணுங்க.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.