பெண்களின் மாதவிடாயில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றை மருந்துகள் இன்றி, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றம் மூலமாகவும் சீரமைக்கலாம் என மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
உணவு பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் அவ்வப்போது பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய மாத்திரை மருந்துகள் எடுத்து கொண்டாலும் அவற்றை உணவு மூலமாக எப்படி குணப்படுத்தலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.
Irregular periods -Easy remedy
மாதவிடாய் சரியான நேரத்தில் வரவேண்டும் என்றால் எள்ளு இரவில் ஊறபோட்டு தண்ணீர் வடித்து அதில் ஓமம் பொடித்து போட்டு குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறு சரியாகும். 15 முதல் 200 நாள் குடித்து வர மாதவிடாய் சரியான நேரத்தில் வரும் என்கிறார் மருத்துவர் உஷா நந்தினி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.