செம்ம சாஃப்ட், டேஸ்ட்... இந்தக் கீரை சேர்த்து சப்பாத்தி; சைட் டிஷ்ஷே தேவையில்லை: வெங்கடேஷ் பட் ரெசிபி
வெந்தயக் கீரை கொண்டு டேஸ்டியான சப்பாத்தியை எப்படி செய்வது என சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். அதன் ரெசிபியை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
வெந்தயக் கீரையை வைத்து சாஃப்டான சப்பாத்தி தயாரித்து அசத்துவது எப்படி என்று செஃப் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டுள்ளார். அதன் செய்முறையை தற்போது காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
250 கிராம் கோதுமை மாவு, 50 கிராம் கடலை மாவு, கால் ஸ்பூன் ஓமம், அரை ஸ்பூன் பெருங்காய பொடி, அரை டேபிள் ஸ்பூன் காஷ்மீரி சில்லி பௌடர், அரை டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, இரண்டு பச்சை மிளகாய், வெந்தயக் கீரை, ஒன்றரை டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய், 5 டேபிள் ஸ்பூன் தயிர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு நெய்.
செய்முறை:
Advertisment
Advertisement
250 கிராம் கோதுமை மாவுடன், 50 கிராம் கடலை மாவு, கால் ஸ்பூன் ஓமம், அரை ஸ்பூன் பெருங்காய பொடி, அரை டேபிள் ஸ்பூன் காஷ்மீரி சில்லி பௌடர், அரை டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். இதேபோல், இரண்டு பச்சை மிளகாய்களை எடுத்து அதில் இருந்து விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி இவற்றுடன் சேர்க்க வேண்டும்.
மறுபுறம் வெந்தயக் கீரைகளை பொடியாக நறுக்க வேண்டும். அதன் பின்னர், அடுப்பில் ஒரு தவா வைத்து அதில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும். இந்த எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரைகளை சேர்த்து வதக்க வேண்டும்.
இரண்டு நிமிடங்கள் இதை வதக்கிய பின்னர், அதன் சூடு இருக்கும் போதே முதலில் எடுத்து வைத்திருந்த பொருட்களுடன் சேர்க்க வேண்டும். இத்துடன் 5 டேபிள் ஸ்பூன் தயிரையும் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் சேர்த்த பின்னர், சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். பிசைந்த பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு இந்த மாவை அப்படியே ஊற வைக்க வேண்டும்.
அதன் பின்னர், சப்பாத்தி வடிவத்திற்கு இதை தேய்த்து நெய் தடவி அடுப்பில் சுட்டு எடுக்கலாம். இப்படி செய்தால் சுவையான, சாஃப்டான வெந்தயக் கீரை சப்பாத்தி தயாராகி விடும். இதை சைட் டிஷ் இல்லாமலே சாப்பிடலாம்.