சூடான ரசம்... இந்த பொருளை இப்படி சேருங்கள்; கமகமன்னு இருக்கும்

சூடான சாத்தில் போட்டு சாப்பிடக்கூடிய அளவிற்கு மிளகு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சூடான சாத்தில் போட்டு சாப்பிடக்கூடிய அளவிற்கு மிளகு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasam f

மணமும் சுவையும் நிறைந்த ஒரு மிளகு ரசம் எப்படி செய்வது என்று ஹோம் குக்குங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 
 
தேவையான பொருட்கள்

Advertisment

புளி 
தண்ணீர்
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 5
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
பெருங்காயம் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு
கொத்தமல்லி இலை 

செய்முறை 

புளியை வெந்நீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். புளி நன்கு ஊறியதும் அதை நன்றாக பிழிந்து சாறு எடுக்கவும். அம்மியில் அல்லது மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் பூண்டுகளை கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்ததும் அதை ஒரு பக்கமாக வைத்துக்கொள்ளவும்.

Advertisment
Advertisements

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்/. எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு போடவும்.  கடுகு தாளிக்கத் துவங்கியதும், காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்க்கவும்.  காய்ந்த மிளகாய் நன்றாக வதக்கவும்.

பிறகு நறுக்கிய தக்காளிகளை இதில் சேர்க்கவும். சிறிதளவு கறிவேப்பிலை போடவும். தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள் தூள் சேர்க்கவும். அதன்பிறகு, தயார் செய்த மிளகு கலவையை சேர்த்து நன்றாக கிளறவும்.

புளி சாறை ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். மிளகு ரசம் தயாராகிறது. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.

அவ்வளவு தான் சூடான மிளகு ரசம் தயாராகிவிட்டது. இதனை சூடான சாதத்துடன், உருளை கிழங்கு பொரியல் அல்லது அப்பளத்துடன் பரிமாறலாம்.

Rasam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: