சீக்கிரமா ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் அதுவும் சிம்பிளாக ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ பால் கொழுக்கட்டை செய்து சாப்பிடுங்கள். சுவையாகவும் இருக்கும் டக்குனு செய்தும் விடலாம்.
அதேபோல இதனை ரேஷன் அரிசியில் செய்தால் சுவையாக இருக்கும். அப்படி ரேஷன் அரிசியில் வெறும் 4 பொருட்களை வைத்து பால் கொழுக்கட்டை செய்வது பற்றி தமிழ் தாளிக்கும் ஓசை யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
ரேஷன் அரிசி
கல் உப்பு
தேங்காய்
வெல்லம்
ஏலக்காய்
செய்முறை
சுத்தம் செய்த ரேஷன் புழுங்கல் அரிசியில் கல் உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பின்னர் ஒரு வெள்ளைத்துணியில் இந்த மாவை சேரத்து மூடி வடிகட்டி மீதமுள்ள ண்ணீரை வடித்து எடுக்கவும். பின்னர் அந்த அரிசையை எடுத்து கொழுக்கடை மாதிரி உருட்டிக்கொள்ளலாம். சிறிது சிறிதாக உருட்டி எடுக்க வேண்டும்.
ரேஷன் புழுங்கல் அரிசி பால் கொழுகட்டை/ Paal kolukattai recipe in Tamil/kolukattai recipe
பின்னர் துருவிய தேங்காயை அரைத்து பால் எடுத்து காய்ச்சவும். முதல் பால் கெட்டியாக இருக்க வேண்டும். அதேபோல வெல்லத்தை கரைத்து எடுக்கவும். பதம் தேவை இல்லை.
பின்னர் தேங்காய் பாலில் கொழுக்கட்டையை சேரத்து வேக வைக்கவும். வெல்லபாகு தயார் ஆனதும் பாலில் வெல்லத்தை வடிகட்டி சேர்க்கவும். அடுத்ததாக வாசனைக்கு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது அதில் மீது உள்ள கெட்டியான பாலை சேர்த்து கொதி விடவும். அடுப்பை அணைத்து விட்டு ஒரு மணி நேரம் அதை அப்படியே வைத்து விடவும். அப்போது தான் கெட்டியாக இருக்கும்.