scorecardresearch

இந்தப் பால் அருந்தினால் சளி, சோர்வு..? ஷாக் ஆய்வு ரிப்போர்ட்

நாம் வெகு நாட்களாக உடல் ஆரோக்கியத்திற்கு பால்தான் சிறந்தது என்று நம்பி வருகிறோம். குறிப்பாக எலும்பு ஆரோக்கியம் , பல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு பால் குடிப்பதுதான் தீர்வாக பார்க்கப்படுகிறது.

இந்தப் பால் அருந்தினால் சளி, சோர்வு..? ஷாக் ஆய்வு ரிப்போர்ட்

நாம் வெகு நாட்களாக உடல் ஆரோக்கியத்திற்கு பால்தான் சிறந்தது என்று நம்பி வருகிறோம். குறிப்பாக எலும்பு ஆரோக்கியம் , பல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு பால் குடிப்பதுதான் தீர்வாக பார்க்கப்படுகிறது.

இதில் உண்மை இருந்தாலும், பாலால் சில பிரச்சனைகளும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பாலில் உள்ள A1-beta-casein என்ற புரோட்டின்  சில உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.

உதாரணமாக சளி, சைனஸ் நோய், வீக்கம், சோர்வு மற்றும் மயக்கம், டைப் 2 சர்க்கரை நோய்யால் ஏற்படும் நரம்பு கோளாறு ஆகியவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், எ2 கொழுப்பு சத்து உள்ள பாலில்,  A1-beta-casein என்ற சத்து இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எ2 வகை பால் உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது என்று கூறப்படுகிறது.

இதுவரை நமக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில்,எ1 பாலைவிட எ2 பால்தான் குறைந்த சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஏ1 பாலில் இருக்கும் பீட்டா- கேசியன்  மூட்டேஷனால் டைப் 1 சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

இதனால் முடிந்த வரை எ2 பால் குடிப்பது நல்லது. ஆனால் ஜீரணம் தொடர்பாக சிக்கலில் இருப்பவர்களுக்கு எ2 பால் குடித்தால் மேலும் நிலை மோசமாகலாம். இந்நிலையில் எ2 பால் வகையை அனைவரும் குடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Milk lead to health issues like cold fatigue inflammation and type 2diabetes