பாலைவிட மோரை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்று விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது : “நீரின்றி அமையாது உலகு என்று சொல்வதுபோல், மோர் இன்றி அமையாது உணவு என்பதுபோல், நாம் மோரை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பாட்டில் மோர் ஊற்றி சாப்பிடாலும் சரி, அல்லது தனியாக குடித்தாலும் சரி. மோர் மிகவும் அவசியம். பாலை ஏன் குடிக்க பரிந்துரைப்பதில்லை என்றும் பாலிலிருந்துதான் மோர் வருகிறது. ஆனால் அதை குடிக்க சொல்கிறீர்கள் என்று பலரும் கேட்பார்கள். பால் இயற்கையான முறையில் பக்குவப்பட்டு உடலுக்கு தேவையான விஷயங்களும், நுண்ணுயிறிகளை உடலுக்கு எடுத்துச் செல்லும் நன்மை அதில்தான் இருக்கிறது. பால் தவிர்த்தால், கால்சியத்திற்கு எங்கு செல்வது, தைராய்டுக்கு மாத்திரை எடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு பால் தான் சரியாக இருக்கும். அப்படி பாலுக்கு மாற்று என்ன என்று கேட்பார்கள்.
ஒரு நாளைக்கு வளர்ந்த நபருக்கு 1000 முதல் 1200 மில்லிகிராம் வரை கால்ஷியம் தேவைப்படுகிறது. ஒரு கிளாஸ் மோரை குடித்தால் கால்பங்கு தேவையான கால்சியம் கிடைக்கும். ஒரு நாளில் 2 கிளாஸ் மோர் குடித்தால் ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது. வணிகத்திற்காக அலையும் நபர்கள் மற்றும் சூடாக இருக்கிறது குளிர்மையான பானம் வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்பனேட்டட் குளிர்பானங்களை தேர்வு செய்யக்ககூடாது. இந்த குளிர்பானங்கள் நமக்கு சர்க்கரை நோய், இதய நோய்யை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம். இதனால் நீங்கள் மோர் குடிக்கலாம். கூடுதலாக புரோபையாட்டிக்ஸை தருகிறது. உடலுக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளை அது கொடுக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் விரைவாக ஜீரணிக்கும் தன்மையை கொடுக்கிறது. மேலும் அடிக்கடி வெளியில் சாப்பிடுகிறவர்கள், சாப்பிட்டவுடன் மலம் வெளியாகும் சிக்கல், வயிறு வலிக்கும் சிக்கல் இருக்கும். இதுலிருந்து மோர் குடிப்பதால் காப்பாற்ற முடியும். மோர் என்பது ஒரு இயற்கையான அன்டாசிட். எல்லா உணவையும் சாப்பிட்ட பின்பு மோர் குடிக்க வேண்டும் என்று கூறுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
குடல் புண் நோயாளிகள் அனைவருக்கும் மோர் எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும். எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு எடை கூடுவதற்காக தயிர் சோறும், மாவடுவும் கொடுக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், மோர் சேர்த்து சமைக்கும் கம்பங்கூழ்தான். கம்மங் கூழ் மோர்விட்டு, சாப்பிட வேண்டும். மேலும் கம்மங் கூழில் சேர்க்கும் வெங்காயமும் உடலுக்கு நன்மை தருகிறது. ” என்று அவர் கூறினார்.