கல்யாண வீடுகளில் மிகவும் எளிமையான சட்டுன்னு செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை என்றால் அது பால் பாயாசம் தான். பலருக்கும் பால் பாயாசம் பால் ஊற்றுவதால் பிடிக்காமலேயே இருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு பால் இல்லாமல் வெறும் பால் பவுடர் வைத்து பால் பாயாசம் செஃப் தீனா ஸ்டைலி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சேமியா - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
பால் பவுடர் - 100 கிராம்
ஏலக்காய்
முந்திரி பருப்பு - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 25 கிராம்
நெய் - 50 கிராம்
எண்ணெய்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் சேமியாவை பிரித்து போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணையை வடித்து அதை நொறுக்கி உடைத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த சேமியாவை போட்டு கரைத்து விட்டு வேகவிடவும்.
மேலும் ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் போட்டு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். பின்னர் சேமியா வெந்து வந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். அது கெட்டியாக வரும்போது கரைத்து வைத்துள்ள பால் பவுடரை கொட்டவும்.
கல்யாணவீட்டு பால் பாயசம் | New year SPL Paal Payasam |Chef Deena's Kitchen
இதை கொதிக்க வைக்கும் போது வைக்கும் போது பக்கத்தில் ஒரு அடுப்பில் நெய் ஊற்றி அதில் முந்திரி திராட்சைகள் வறுத்து எடுத்து பாயாசத்தில் கொட்டவும். வாசனைக்கு ஏலக்காய் பொடி தூவி இறக்கினால் பால் பாயாசம் ரெடி ஆகிவிடும்.