Advertisment

ஒரு கப் பால், அதே கப் பொட்டுக்கடலை... தரமான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் - ஈசி டிப்ஸ் பாருங்க!

ஹெல்தி, ஈஸியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Snac

வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டே ஹெல்தி, ஈஸியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்வது பற்றி பார்ப்போம். Akshaya.com என்ற யூடியூப் பக்கத்தில் இந்த ரெசிபி உள்ளது. 

Advertisment

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து 1 கப் பால் சேர்த்து, அதே கப்பில் 1 கப் அளவு பொட்டுக்கடலை சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து பொட்டுக்கடலை வெந்து வர வேண்டும். அதன் பின் அடுப்பை நிறுத்தி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு 10 முந்திரி, 3 ஏலக்காய் போட்டு மைய அரைக்கவும். 

இப்போது மீண்டும் பால் சேர்த்து ஒரு சுற்று அரை விடவும். இப்போது மீண்டும் கடாய் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அரைத்து வைத்த கலவையை ஊற்றி கலக்கவும். மீதமுள்ள பால் வற்றி வரும் வரை வேக விடவும். கெட்டி பதத்திற்கு வந்ததும் 1 கப் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி விடவும். இப்போது நெய் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

நன்கு உருண்டு வந்தபின் அடுப்பை அணைத்து நெய் தடவிய தட்டிற்கு மாற்றி கொஞ்சம் ஆறிய பின் சதுர வடிவில் நறுக்கலாம். அவ்வளவு தான் ஹெல்தியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment