பால் போளியை நாம் ரவையில் செய்யலாம். அதுபோல கோதுமை மாவிலும் செய்யலாம். ஆனால் ரவையை வைத்து செய்வதுதான் பாரம்பரியமான முறை.
தேவையான பொருட்கள்
உப்பு
ரவை
நெய்
பால்
சர்க்கரை
பாதாம்
முந்திரி
செய்முறை: ரவையில் உப்பு சேர்க்கவும், அதில் 2 ஸ்பூன் நெய் விடவும் . தொடர்ந்து நன்றாக பிசையவும். சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும். இது 2 மணி நேரம் ஊற வேண்டும். இதேவேளையில் ஒரு லிட்டர் பாலை நன்றாக காய வைக்கவும். பால் பாதி அளவு ஆனதும், 5 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்க வேண்டும். தொடர்ந்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும். இதில் பாதாம், முந்திரி ஆகியவற்றை துருவி சேர்க்க வேண்டும். தற்போது ஊறிய ரவை மாவை,இடித்து இடித்து மிரதுவாக்கவும். ரவை மாவை உருண்டைகளாக பிடித்து, பூரி போல் இடவும். அதை எண்ணெய்யில் பொறிக்கவும். வேண்டுமானால் முழு நெய்யிலும் பொறிக்கலாம். தற்போது ரெடி செய்து வைத்திருக்கும் பாலை பொறித்த பூரிகள் மீது ஊற்றவும். சுவயான பால் போலி ரெடி.