குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் வகையில் ஒரு மினி தோசை எப்படி செய்வது என்று ப்ராவ்ஸ்கிச்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடுகு
கருவேப்பிலை
பச்சை மிளகாய்
இஞ்சி
வெங்காயம்
கருவேப்பிலை
மஞ்சள் தூள்
உப்பு
உருளைக்கிழங்கு
கொத்தமல்லி தழை
இட்லி மாவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கருவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்னர் கடைசியாக வெந்ததும் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் உருளைக்கிழங்கு மசாலா ரெடியாகிவிடும்.
இப்போது ஒரு குழிப்பணியாரம் கல் எடுத்துக் கொள்ளவும். அதில் எண்ணெய், வெங்காயம் தடவி பதம் செய்துவிட்டு மாவு ஊற்றி மேலே சட்னி வைத்து பின்னர் ரெடி செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மேலே மீண்டும் மாவு போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையாக இருக்கும். சட்னி இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையென்றால் தேவையில்லை.
இதை குழந்தைகளின் ஸ்நாக்ஸ் அல்லது லஞ்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம்.