காலை உணவுக்கு ஒரு புதுமையான, அதே சமயம் எளிதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் ஒரு ரெசிபியை தேடுகிறீர்களா? அப்படியானால், இந்த மினி ஸ்டீம் உப்புமா பந்துகள் உங்களுக்கு சரியான தேர்வு. இது சமைக்க எளிதானது மட்டுமல்லாமல், சுவையிலும் சிறந்தது. இதை எப்படி செய்வது என்று குக்வித்ரிது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதில் ரவையை கொட்டி, கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறி, ஒரு மாவுப் பதத்திற்கு கொண்டு வாருங்கள். இந்த ரவைக் கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, அவற்றை இட்லி தட்டில் அடுக்கி, ஆவியில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். ஆவியில் வேகவைப்பதால், இந்த உப்புமா பந்துகள் மிகவும் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இப்போது, ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மற்றும் கறிவேலை சேர்த்து தாளிக்கவும். இவை பொன்னிறமானதும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தாளித்த கலவை தயாரானதும், ஆவியில் வேகவைத்த ரவை பந்துகளை கடாயில் சேர்த்து, மசாலாவுடன் நன்கு கலக்கும் வரை கிளறவும். கடைசியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவி, சூடாகப் பரிமாறவும்.
இந்த மினி ஸ்டீம் உப்புமா பந்துகள் உங்கள் காலை உணவை சுவையுடனும், ஆரோக்கியத்துடனும் தொடங்குவதற்கு ஒரு சிறந்த வழி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.