தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
வெல்லம் -தேவையான அளவு
ஏலக்காய் தூள் – சிறிதளவு
ஆப்பம் மாவு – 2 கப்
செய்முறை
முதலில் தேங்காயைத் துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் என மூன்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, அதில் காய்சிய வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளவும். அதை ஆற வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஆப்பச் சட்டி வைத்து நெய் சேர்த்து காய்ந்த உடன் ஒரு கரண்டி ஆப்ப மாவு எடுத்து ஊற்றி சட்டியை சுழற்றி கொள்ளவும். அடுத்து மூடி வைத்து வேக வைக்கவும். ஆப்பம் வெந்து வந்த உடன் அதை தட்டில் போட்டு நடுவில் தேங்காய் கலவை வைத்து பரிமாறினால் சுவையான மினி ஸ்வீட் ஆப்பம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“