காய்கறி உடலுக்கு எவ்வளவு நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள் அப்படி பட்டவர்களுக்கு சுவையான கலர் கலரா பொறியல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வார இறுதியில் மீதியான காய்களை வைத்து இதை செய்யலாம். எந்த காய்களையும் ஒதுக்காமல் சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
வெங்காயம்
தக்காளி
பூண்டு
சாம்பார் பொடி
கரம் மசாலா
உப்பு
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
எண்ணெய்
சோம்பு
தேங்காய்
நிலக்கடலை
செய்முறை
நமக்கு தேவைப்படும் காய்கள் அனைத்தையும் சுத்தமாக கழுவி நீள வாக்கில் அரியவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கருவேப்பிலை, சோம்பு போட்டு தாளிக்கவும்,
பின்னர் தாளிப்பில் வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து அது வேகும் தன்மைக்கு ஏற்ப மாற்றி மாற்றி சேர்க்கவும்.
mixed vegetable poriyal .காய்கறி பொரியல் . Vaani raani serial recipe.
ஆவியில் சிறிது நேரம் வேக விட்டு பின்னர் உப்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சாம்பார் தூள் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் விட்டு வேகவிடவும். இறுதியில் நிலக்கடலை அரைத்து சிறிது பொடி சேர்த்து கிளறி, தேங்காய் துருவல் போட்டு கொத்தமல்லி தழைகளை மேலே தூவி இறக்கினால் கலவை காய்கறி பொறியல் ரெடியாகி விடும்.
இதில் சிறிது சுடு சாதம் சேர்த்து எண்ணெய் விட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபியாக கொடுக்கலாம். உடலுக்கு சத்தும் கூட. வாரத்தில் இரண்டு முறை இப்படி ட்ரை பண்ணலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“