இட்லி, தோசைகு பொருத்தமான காம்பினேஷன். அரைச்சுவிட்ட சாம்பார் ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். அரைச்சுவிட்ட சாம்பார் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு
தக்காளி
மஞ்சள் தூள்
உப்பு
பெருங்காய தூள்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
முழு தனியா
காய்ந்த மிளகாய்
தேங்காய்
நெய்
கடுகு
சீரகம்
சின்ன வெங்காயம்
முருங்கை காய்
புளி தண்ணீர்
கறிவேப்பிலை
வெல்லம்
கொத்தமல்லி இலை
செய்முறை:
குக்கரில் நன்கு கழுவிய துவரம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கலந்து விடவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 விசில் வரும் வரை விட்டு வேகவிடவும்.
பின்னர் ஒரு பானில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அடுத்து காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
பின்பு பெருங்காய தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும். பிறகு மிக்சியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும். பின்பு காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar
அடுத்து அரைத்த மசாலா விழுது, மசாலா தண்ணீர், புளி தண்ணீர் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும். வேகவைத்த பருப்பு, தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியாக சிறிது வெல்லம், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் சுவையான அரைச்சுவிட்ட சாம்பார் தயார்.