முதல்வர் ஸ்டாலினுக்கு ’நான் வைக்கும் மீன் குழம்புதான் ரொம்ப பிடிக்கும்’ என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் துர்கா ஸ்டாலின். வஞ்சரம் மீனை வறுத்தால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் என்றும், மீன் குழம்பு என்றால் காலா, கிழங்கான் மீன்களை சாப்பிடுவார்கள் என்று கூறினார். மேலும் முதல்வருக்கு பிடித்த மீன் குழம்பு ரெசிபியை அவர் பகிர்ந்துகொள்கிறார்.
செய்முறை
தேவையான அளவு பளியை கரைக்க வேண்டும். தொடர்ந்து அதில் 2 தக்காளியை மசித்து கரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து உப்பை சேர்த்து கரைக்கவும். ஸ்பெஷல் குழம்பு மசாலா, 2 ஸ்பூன் இதில் சேர்த்து கரைக்க வேண்டும். மீனை கழுவும்போது புளித்த மோர், கல் உப்பு, மஞ்சள் போடி சேர்த்து கழுவ வேண்டும். கொத்தமல்லி, பூண்டு, சீரகம்,கருவேப்பிலை அம்மியில் இடித்து குழம்பு கரைசலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது மண்சட்டியை அடுப்பில் வைத்துவிட்டு,நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். தொடர்ந்து புதிதாக செய்த வடகம் சேர்க்க வேண்டும். இரண்டு பச்சை மிளகாய்,கறி வேப்பிலை போட வேண்டும். தொடர்ந்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாரியதும், பூண்டு சேர்க்க வேண்டும். தொடர்ந்து கரைத்து வைத்த குழம்பு கரைசலை சேர்க்க வேண்டும். தொடர்ந்து மூடி போட்டு குழம்பு கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து சுத்தம் செய்த மீனை சேர்க்க வேண்டும். மீன் வெந்ததும். கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும்.
ஸ்பெஷல் குழம்பு பொடி ரெசிபி
கொத்தமல்லி, மஞ்சள், வெந்தயம், மிளகு, சீரகம், பருப்பு ஆகியவற்றை வெயிலில் காயவைத்து அரைத்துகொள்ள வேண்டும். இதைத்தான் முதல்வர் வீட்டின் எல்லா குழம்புக்கும் துர்கா ஸ்டாலின் பயன்படுத்துகிறார்.