எந்த குழம்பு செய்வது என்ற குழப்பம் ஏற்படும். இந்நிலையில் மொச்சையை வைத்து இந்த சூப்பரான குழம்பு ரெசிபியை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய்
பெரிய வெங்காயம் நறுக்கியது
தக்காளி
மொச்சை
தேங்காய் துண்டுகள்
உருளைக்கிழங்கு
எண்ணெய்
பூண்டு
சீரகம்
கடுகு
வெந்தயம்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
நல்லெண்ணை
உப்பு
செய்முறை : ஒரு கடாயை சூடு செய்து, அதில் நல்லெண்ணை ஊற்ற வேண்டும். தொடர்ந்து சாதராண எண்ணையும் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும், ஒரு ஸ்பூன் சீரகம், வெந்தயம், கடுகு சேர்க்க வேண்டும். சிறிதாக கிளரிவிட வேண்டும். நன்றாக சிவந்து வந்ததும், சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும். தொடர்ந்து பூண்டு சேர்க்கவும். இது நன்றாக வதங்கியதும், பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். தொடர்ந்து கருவேப்பில்லை சேர்க்கவும். இவை நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்க்க வேண்டும். நறுக்கிய கத்திரிக்காய்யை சேர்க்க வேண்டும். தொடர்ந்து உருளைக்கிழங்கு சேர்க்க வேண்டும். இதை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து மிளகாய்தூள், மல்லித்துள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வேக வைத்த மொச்சையை தொடர்ந்து சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து புளி தண்ணீர் சேர்க்கவும். ஒரு 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அரைத்த தேங்காய்யை சேர்க்கவும். தொடர்ந்து 2 நிமிடங்கள் மூடி வைக்கவும்.